Header image alt text

யாழ். குப்பிளான் தாயகம் கல்வி நிலையத்தின் வாணிவிழா-2018 நிகழ்வு இன்று (20.10.2018) மாலை 3மணியளவில் தாயகம் முன்றலில் தாயகம் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. றயந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் க.கராளசிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தலைவர் சோ.பரமநாதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

யாழ். கோண்டாவில் நாராயணா சனசமூக நிலையத்தினால் கிராமத்திலுள்ள ஆசிரியர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு கடந்த 12.10.2018 வெள்ளிக்கிழமை மாலை சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்களும், அக் கிராமத்திலிருந்து ஆசிரியர்களாக பணியாற்றுகின்ற சுமார் 30 ஆசிரியர்கள் ஆலய முன்றலில் இருந்து மங்கள வாத்தியங்களின் இசையுடன் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள். Read more

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டத்தின்கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தென்னிலங்கை இளைஞர், யுவதிகள் அநுராதபுரம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தனர். இவர்களுக்கும் யாழ். கோப்பாய் பிரதேசத்தின் உரும்பிராய் பகுதி இலக்குமி இளைஞர் கழக உறுப்பினர்களுக்குமிடையிலான இளைஞர் பரிமாற்ற நிகழ்வுத் திட்டம் இடம்பெற்றது.

இதன்கீழ் தென்னிலங்கை இளைஞர் யுவதிகள் இங்குள்ள கோப்பாய், உரும்பிராய் பகுதியிலுள்ள இளைஞர், யுவதிகளின் வீடுகளில் ஐந்து நாட்கள் தங்கிநின்று இங்குள்ள உணவுப் பழக்கவழக்கங்கள், இங்குள்ள கலாச்சாரம் என்பவற்றைப் பகிர்ந்துகொண்டு இங்குள்ள சுற்றுலா மையங்களையும் சென்று பார்வையிட்டிருந்தனர். மேற்படி நிகழ்விற்கான இறுதி வைபவமும், அவர்களை வழியனுப்புகின்ற நிகழ்வும் 14.10.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். Read more