Header image alt text

யாழ். சுன்னாகம் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பது சம்பந்தமான கூட்டம் இன்றுமாலை 4மணியளவில் சுன்னாகம் நகர அபிவிருத்தி சங்கத் தலைவர் குமாரவேல் அவர்களின் தலைமையில் சுன்னாகம் தபாலகத்தில் இடம்பெற்றது.

இதில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். பிராந்திய அஞ்சல் அதிபர் திருமதி மதுமதி வசந்தகுமார், சுன்னாகம் தபால் நிலைய தபாலதிபர் திருமதி ராஜராஜன், வலிதெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சன், சபா புஸ்பநாதன், பேரின்பநாயகம் உள்ளிட்ட சுன்னாகம் நகர அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த், முன்னாள் வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராஜா, யுகராஜ் மற்றும் தபால்நிலைய அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

மக்கள் இல்லாத வீதிகளுக்கு கிராம அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய உதயன் பத்திரிகையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

மேற்படி வீதிகளுக்கான திட்டங்கள் யாவும் அங்குள்ள வலிகிழக்கு பிரதேசசபையின் உபதவிசாளர் கபிலன் மூலம் பிரேரிக்கப்பட்டு மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி, வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோசன் ஆகியோரின் ஆலோசனைக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் உள்வாங்கப்பட்டவையாகும். மேற்படி பத்திரிகைச் செய்தியினைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்றுகாலை வலிகிழக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கபிலனுடன் புத்தூர், அச்சுவேலி பகுதிகளுக்குச் சென்று குறித்த வீதிகளை நேரில் பார்வையிட்டார். Read more

03.10.18 நடைபெற்ற வடக்கு கிழக்கு ஜனாதிபதி அபிவிருத்தி செயலணியில் இரண்டாவது தடவையாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிலைமைகளை தெளிவாக எடுத்துக் கூறினார். பல நிமிடங்கள் இது தொடர்பாக வாத பிரதி வாதங்கள் இடம் பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தார். நிலத்தடி நீரை உறிஞ்சியதால் இந்தியாவில் பல கிராமங்கள் அழிந்தன என பாராளுமன்ற உறுப்பினர் கூறியபோது அதை ஏற்றுக் கொண்ட ஜனதிபதி எத்தியோப்பியா நீர் பஞ்சத்துக்கு காரணம் இதுவே என கூறினார். Read more

03.10.18 செவ்வாய்கிழமை பள்ளியின் ஆசிரியர் திருமதி . சசிகலா தலைமையில் இடம் பெற்றது.
இவ்நிகழ்வில் புளொட் அமைப்பின் முக்கியஸ் தரும், முன்னை நாள் வவுனியா நகர பிதாவும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வவுனியா தெற்கு கல்வி வலய உதவி பணிப்பாளர் திரு.தர்மபால சிறப்பு விருந்தினராகவும், ஒய்வு பெற்ற முன்னாள் கோட்ட கல்வி அருள் வேல் நாயகி , பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். Read more