 தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கி உள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் தற்போது யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் உள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தனது எதிர்கால அரசியல் குறித்து நிகழ்த்தும் விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் அதிகாரக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையினர், மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரநிநிதிகள், ஆதரவாளர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
 
		     சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை அரசியலமைப்புச் சபை கூடவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.