யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கேபிள் வயரினூடாக மின்சாரம் பாய்ந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.