 இன்று யாழ் நகரில் வர்த்தகர்களினால் ‘கோபவனி’ ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது. விவசாயிக்கு பல வழிகளிலும் துணையாக விளங்கும் பசுக்களுக்கும் எருதுகளுக்கும் மரியாதையும் நன்றியும் செலுத்துமுகமாக இந்த கோபவனி யாழ் நகரின் மையப்பகுதியான சத்திரச்சந்தி வைரவர் ஆலயத்தில் ஆரம்பித்து நகர்வலம்வந்து ஆலயத்தில் முடிவுற்றது. இந் நகர்வலத்தின்போது பசு வதைக்கு எதிரான கோசங்களும் மாட்டிறைச்சி கடைகளுக்கு முற்றான தடைவிதிப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இப் பவனியில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் ஈ.சரவணபவன் அவர்களும் யாழ் மாநகரபிதா இம்மானுவேல் ஆர்னோல்ட், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மறவன்புலவு சச்திதானந்தம் ஐயா மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் உட்பட வர்த்தகர்களும் பொதுமக்களும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளும் கலந்துகொண்டிருந்தனர்.  Read more

		     இணுவில் அறிவாலயத்தின் 14வது ஆண்டுவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றபோது அறிவாலயத்தின் நூல்நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ள பகுதியானது செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் மண்டபம் என நாமமிடப்பட்டுள்ளது. இப்பகுதி நூல்நிலையமாக மாற்றப்படுவதற்கான நிதி உதவிகளை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் தங்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக வழங்கியிருந்தமை இந் நிகழ்வின்போது சுட்டிக்காட்டப்பட்டது. அறிவாலயத்தின் தற்போதைய தலைவர் எஸ்.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலாநிதி ஆறுதிருமுருகன், யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், பேராசிரியர் தேவராஜா உட்பட கிராமத்தின் கல்விமான்கள், பெரியோர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.