Header image alt text

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில் வொஷிங்டன் பயணமானார்.

நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர். (அரச தகவல் திணைக்களம்)

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில் நிவாரண பனர்கள் கட்டியவாறு கொண்டுசெல்லப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வெள்ள நிவாரணப் பெனர்களுடன் ஒன்பது பாரவூர்திகளில் சுமால் 50 இலட்சம் ரூபா பெறுமதியில் கொண்டுசெல்லப்பட்ட பொருட்கள் கிளிநொச்சியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பாரவூர்திகளிலிருந்து அரிசி, மா, சீனீ, பருப்பு, கடலை, சோயா, ரின்மீன், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள், வெங்காயம் போன்ற பொருட்களை இறக்கியதாக பொருட்களை இறக்கி ஏற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். Read more

இலங்கையின் புதிய இராணுவ பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து தீவிர சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மீறல்கள் இடம்பெறாததை தடுப்பதற்கான யுத்தத்திற்கு பிந்திய பாதுகாப்பு துறை சீர்திருத்தங்களின் போது படையினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது மிகமுக்கியம் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. Read more

அனுமதி மறுக்கப்பட்ட தரம் 6 மாணவனுக்கு, கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் தரம் ஆறுக்கு தனது மகனை கிளிநொச்சியில் உள்ள இரண்டு பாடசாலைகளிலும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்து, தந்தையொருவர் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு செய்திருந்தார்.

குறித்த முறைபாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர், கிளிநொச்சி மத்திய கல்லூரி அதிபர், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை விசாரணைக்கு அழைத்திருந்தது. Read more

இலங்கை ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கபட்டமைக்கு இலங்கையின் வடக்கு கிழக்கினை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர் கனகரஞ்சினி ஜோகராசா தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணமல் ஆக்கப்படவர்க்ளுக்கு நீதி கிடைக்கும், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நோக்கில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். Read more

வெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகளை அமைக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பாக வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் எல். எஸ். பலன்சூரிய தெரிவிக்கையில், இதற்கான திட்டத்தின் கீழ் 500 புதிய வீடுகள் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவித்தார். புதிய உதாகம்மான வேலைத் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை லுணுகம்வெஹரவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சோபித நாஹிமிகம இன்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். Read more