கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா பத்து லட்சம் நிதியில் ஆவரங்கால் நடராஜஇராமலிங்க வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம்
முழுமையாக புனரமைக்கப்பட்டு 31-01-2019 அன்று பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. Read more
யா/வதிரி திரு இருதயக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இறுதி நிகழ்வுகள் 01-02-2019 அன்று கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் திரு. இ.இராகவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் அவர்களும் கௌரவ விருந்தினராக கரவெட்டி பங்குத்தந்தை அருட்பணி ப. அன்ரனிப்பிள்ளை அவர்களும் சிறப்பு விருந்தினராக பொறியியலாளர்(பழைய மாணவர்) ஜோன் ஜெயந்தன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
துபாயில் பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துர மதூஷ் உட்பட கைது செய்யப்பட்டவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேடரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.