காணாமல் போனோருக்கு பதில் கூற வலியுறுத்தி காணாமல் போனோர்களின் உறவுகள் கறுப்பு துணியால் வாயைக் கட்டியும் விளக்கேற்றியும் தமது உறவுகளைத் தேடி அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
சமூக வலைத்தளங்களின் நண்பர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின் போது, மக்கள் பிரதிநிதிகளே எமது கண்ணீர் உங்களுக்கு வெறும் தண்ணீரா? இலங்கையின் இறையாண்மையும் எனது மகனும் ஒன்றா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நீதி என்ன? இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more
2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 2018 டிசெம்பர் மாதம் 31 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயற்பாடுகள், மோசடிகள் பற்றி ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முறைப்பாடுகளை பொறுப்பேற்க ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவது உறுதியானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இது தொடர்பில் சட்ட ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.