கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்தி கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

கசிப்பினால் என்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை, கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. வீடுகளின் வாசல்கள் வரை கசிப்பு விற்பனை வந்துவிட்டது.

எமது கிராமத்தின் கசிப்பு விடயம் தொடர்பில் கிராம அலுவலர், மற்றும் காவல்துறையினருக்கும் அறிவித்தும் அவர்களால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேற்படி பெண் தெரிவித்துள்ளார்.