தனியார் அரை சொகுசு பேருந்து சேவை விவகாரம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் பேருந்துகளின் உரிமையாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பேருந்துகளில் மக்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. இதனால் இந்த அரை சொகுசு பேருந்து சேவையை ரத்து செய்யுமாறு மக்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.