லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனீஷா குணசேகர அவரது பதவிக்காலம் நிறைவடையுமுன் நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அதற்கான காரணம் தெரியவரவில்லை. இதேவேளை ஒஸ்ரியாவின் தூதுவரான சரோஜா சிறிசேனவுக்கு பதிலாக தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராக கடமையாற்றும் மஜிந்தா ஜெயசிங்க நியமிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.