குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more
ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் பீ.ஜீ குமாரசிங்க தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
குற்றச்செயல்களின் ஈடுபடுவோர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.
வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில், இன்று அதிகாலை நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து, பசறை மடுல்சீம வழியாக எக்கிரிய நோக்கி பயணித்த பஸ், நேற்று மாலை 5.45 அளவில் விபத்துக்குள்ளானது. எட்டு பேர் உயிரிழக்கக் காரணமாக பஸ் விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.