கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என்கிறார் சித்தார்த்தன்
(தி.சோபிதன்)
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக இருந்தால் பேச்சுவார்த்தைகளினூடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
சமகால அரசியல் நிலைமைகளில் ஜனாதிபதி வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்கள், அவருடைய நிலைப்பாடுகள், செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, Read more
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் உள்நாட்டு விவகார அமைச்சர் கே.சண்முகம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் பெப்ரவரி 6ம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலர் பிரிவில் புலிபாய்ந்தகல் மீயான்குளம் பகுதியில் நேற்றிரவு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஜனன தினம் அனுஷ்டிப்பிற்கு சுதந்திர கட்சியால் ஏற்பாடு செய்திருந்த போதிலும் அதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சந்திரிகா என்று கூறினாலே அனைவரும் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.
திறைசேரியின் தேசிய பாதீட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஜூட் நிலுக்ஷான் நேற்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக
ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38) என்ற இளைஞர்
நடைமுறையில் உள்ள புகையிரத சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணையை இந்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை புகையிரத சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.