கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதலாம் வருட, இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில், இரண்டு 1ஆம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்தப் பல்கலைக்கழகக் கலைப்பீட 1ஆம் ஆண்டு மாணவர்கள், ‘வன்முறையற்ற மாணவர் அமைப்பு’ என, பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கிச் செயற்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இன்று பகல், வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதலாம் ஆண்டு மாணவர் இருவர் மீது, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.