பஸ் மற்றும் அனைத்து கனரக வாகனங்கள் வீதியின் இடது நிரலில் மாத்திரம் செல்ல வேண்டும். கொழும்பு வாகன போக்குவரத்துப் பிரிவு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்த நடைமுறையை முன்னெடுத்துள்ளது என்று நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் கமல் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இந்த சட்டத்தை மீறிய 500 சாரதிகளுக்கு இக்காலப்பகுதிக்குள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். கொழும்பு நகரில் வாகன நெரிசலுக்கு கனரகவாகன சாரதிகள் இடதுபக்க நிரலைப் பயன்படுத்தாமையே இதற்கான காரணமாகும். Read more
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகன் மூவரும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், மேற்படி தாய் உயிரிழந்துள்ளதுடன் மகளும் மருமகனும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.