பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவின் அழைப்பிற்கமைய இங்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் 5 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பார். இதன்போது, கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியனவற்றின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி சந்திக்கவுள்ளார். Read more
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் இருந்து கொண்டுவரப்படும் உணவு தொடர்பில் தீவிர பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இலங்கையில் கொரன்னா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தேசிய செயற்பாட்டு குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெளிநாடுகளுக்கான அனைத்துக் குழுக்களின் விஜயங்களையும் நாளை தொடக்கம் இரத்துச் செய்வதற்கு சீன வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தீர்மானித்துள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
சீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரானா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் உள்ளிட்ட மூன்று பேர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சீன ஜனாதிபதி சி ஸிங் பிங் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் விசேட கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.