Header image alt text

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கவேண்டிய கடன் தொகையை மீள செலுத்துவதற்காக மேலும் கடன் பெறுவற்கு மின்சார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச வங்கிகளூடாக இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு 84 பில்லியன் ரூபாய் கடன், செலுத்த வேண்டியுள்ளது. Read more

செய்திக் குறிப்பு:

Posted by plotenewseditor on 18 January 2020
Posted in செய்திகள் 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் வவுனியா மாவட்ட பொதுமக்கள் இணைப்பு அலுவலகம் எதிர்வரும் 28.01.2020 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு,

கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் நினைவில்லத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

2020 ஜனவரி 3 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான சியாங் யோங் ஹாங் 06 தற்போது இலங்கையின் கடற்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

உயிர் வேதியியலாளர்கள் மற்றும் வேதியியலாளர்கள் குழு இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றுள்ளதுடன், இலங்கை கடற்படையின் ஹைட்ரோகிராஃபிக் அதிகாரியும் கப்பலுடன் ஹைட்ரோகிராஃபிக் நடவடிக்கைகளுக்காக இணைத்துள்ளார். Read more

சீனாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். புதிய வைரஸ் ஒன்று சீனாவின் உஹான் பிராந்தியத்தில் பரவியுள்ளது. இதன்காரணமாக சீனாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். Read more

பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீ செனவிரத்ன ஓய்வு பெற்றபின் குறித்த பதவி வெற்றிடத்திற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more

எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடிய வகையில் ஒட்டுசுட்டான் பகுதியில் இயங்கிவந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மிக நீண்ட காலமாக இயங்காத நிலையில் காணப்பட்டது. Read more

வவுனியா செட்டிகுளம் பகுதியில் 51 ஜெலக்னெட் வெடிமருந்து குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்றினை வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் நேற்று இரவு மறித்து சோதனை மேற்கொண்டனர். Read more

எம்.ஜி. ராமச்சந்திரன் (M.G.R) அவர்களின் பிறந்தநாளை (17.01.2020) முன்னிட்டு யாழ். கல்வியங்காட்டில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலை முன்பாக இன்று இடம்பெற்ற நிகழ்வில்

ஈழத்து MGR என அறியப்படும் இருபாலை திரு. சுந்தரலிங்கம் அவர்களின் தலைமையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். Read more

யாழ் நகரில் நேற்று (16.01.2020) ‘கோபவனி’ நிகழ்வு இடம்பெற்றிருந்தது. விவசாயிக்கு பல வழிகளிலும் துணையாக விளங்கும் பசுக்களுக்கும் எருதுகளுக்கும் மரியாதையும் நன்றியும் செலுத்துமுகமாக இந்த கோபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப் பவனியில் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், யோகேஸ்வரன் ஆகியோரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், ஐங்கரநேசன் ஆகியோரும், வர்த்தகர்களும், பொதுமக்களும், கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். சங்கானை சிவப்பிரகாச ஆரம்ப பாடசாலை கால்கோள் விழா நேற்று (16.01.2020) இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். Read more