Header image alt text

ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38) என்ற இளைஞர்

கடந்த மார்கழி 24 ம் திகதி துருக்கியில் இருந்து கிறீஸ்லாந்து நாட்டுக்கு நுழைய முற்பட்டபோது அழைத்து சென்ற மாபீயா குழுவினால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

நடைமுறையில் உள்ள புகையிரத சேவை கால அட்டவணைக்கு மேலதிகமாக மற்றுமொரு கால அட்டவணையை இந்த வாரம் அறிமுகப்படுத்த உள்ளதாக இலங்கை புகையிரத சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நடைமுறையில் உள்ள புகையிரத சேவைகளின் கால அட்டவணையின்படி வெள்ளிக்கிழமை மாலை 5.20 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி பயணிக்கும் 1033 இலக்கமுடைய புகையிரத இனிமேல் வியாழக்கிழமை நாட்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. Read more

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ச ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடலில் ஈடுபட்டதாக தெரியவந்த தகவலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் பீ.ஜீ குமாரசிங்க தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

குறித்த பதவி விலகல் நேற்று முதல் நடைமுறையில் இருப்பதாக டெலிகொம் நிறுவனத்தின் செயலாளர் மஹேஷ் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களின் ஈடுபடுவோர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுக்கள், திட்டமிட்ட குற்றச் செலயல்களில் ஈடுபடுவோர், கப்பம் பெறுவோர், சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருப்போர் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவுக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று விதித்தது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு 3 இலட்சம் ரூபா தண்டப் பணமும் விதிக்கப்பட்டுள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

வவுனியா செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில், இன்று அதிகாலை நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞன் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்சம்பவத்தில், மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பா. நிரோஜன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது. Read more

பதுளையிலிருந்து, பசறை மடுல்சீம வழியாக எக்கிரிய நோக்கி பயணித்த பஸ், நேற்று மாலை 5.45 அளவில் விபத்துக்குள்ளானது. எட்டு பேர் உயிரிழக்கக் காரணமாக பஸ் விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 31 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பலியானவர்களின் இறுதிக் கிரியைகளுக்காக 50 ஆயிரம் ரூபா வீதம் வழங்க என இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. Read more

பசறை – மடுல்சீமை வீதியில் 06ஆம் கட்டை பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியில் கடும் மழையுடனான வானிலை காணப்படும் நிலையில், வீதியில் ஏற்பட்ட வழுக்கல் நிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more