புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இந்த மாத இறுதியில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்காக பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. தற்போதுவரை, 70 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. Read more
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை வலியுறுத்தும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 136 வெளிநாட்டு பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புக்கு அமைய செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகளை கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன ஏற்பாடு செய்திருந்த வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழிலிருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த ரயிலில் நேற்றிரவு மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
முல்லைத்தீவு முறிகண்டியில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மகாறம்பைகுளம் புளியடி பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த மூதாட்டியை காணாததால் உறவினர்கள் தேடியுள்ளனர்.
லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மனீஷா குணசேகர அவரது பதவிக்காலம் நிறைவடையுமுன் நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.