இலங்கையில் கொரன்னா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தேசிய செயற்பாட்டு குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய பின்வருவோர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சர் நியமித்துள்ளார்.
1.ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
2.பத்ரானி ஜயவர்தன, சுகாதார செயலாளர்.
3. டொக்டர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்.
4. மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ். Read more
வெளிநாடுகளுக்கான அனைத்துக் குழுக்களின் விஜயங்களையும் நாளை தொடக்கம் இரத்துச் செய்வதற்கு சீன வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தீர்மானித்துள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
சீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரானா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் உள்ளிட்ட மூன்று பேர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சீன ஜனாதிபதி சி ஸிங் பிங் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் விசேட கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு சாட்சியம் வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி-முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள இருமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தீ விபத்தில் வீட்டினுள் இருந்த 79 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.