பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீனின் சகோதரன் ரிப்கான் பதியூதீன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 6ம் திகதி வரையில் அவரை விளக்கமறியிலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள பிற நபருக்கு சொந்தமான சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பினை போலியான ஆவணங்களை தயாரித்து கைப்பற்றிய சம்பவம் தொடர்பில் ரிப்கான் பதியூதின் இரகசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முதலில் நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சுமார் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.
இலங்கைக்கு வரும் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறும் இலங்கையர்களுக்காக விமான நிலையத்தினுள் தனியான இரண்டு விஸா கருமபீடங்களை திறக்க வானுர்தி தள மற்றும் விமான சேவைகள் நிறுவகம் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட சமன் ரத்னபிரியவின் பெயர், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு தொடர்பில் தற்போது காணப்படும் சட்டத்தை திருத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கை திரும்பியுள்ளனர்.
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் காலம் எதிர்வரும் பெப்ரவரி 25ம் திகதி வரை மீள நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு- கிரான் -கோராவெளி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் 67 வயதுடைய விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்., பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்றுமதியம் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.