இலங்கையின் முதலாவது நிலக்கீழ் ரயில்வே சுரங்கப்பாதையொன்று கண்டி நகரை ​மய்யப்படுத்தி அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கண்டி நகருக்குள் காணப்படும் அதிகபடியாக வாகன நெரிசலை மட்டுப்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உள்நாட்டு கடன் உதவிகளை பெற்றுக்கொண்டு நீண்டகால திட்டமாக இதனை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டி புகையிரத நிலையம், புகையிரத இயந்திர வேலைத்தளம் என்பவற்றை பார்வையிட்டதன் பின்பே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

கண்டி நகரிலிருந்து பேராதனை வரையில்,  5 வைத்தியசாலைகளும், 8 பாடசாலைகளும் காணப்படுவதாகவும், அதனால் இப்பகுதியில் காணப்படும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலேயே மேற்படி சுரங்கள வழி ரயில் பாதையை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு கண்டி அதிவேக வீதியின் இருமருங்கிளும் அதிவேக புகையிரத வீதிக் கட்டமைப்பொன்றை நிறுவவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதென தெரிவித்த அவர்,  சுனாமி போன்ற பாரிய அனர்த்திலிருந்து மீண்டு 52 நாள்களில் புகையிர சேவையை வழமைக்கு திருப்பிய ஊழியர்கள் புகையிரத திணைக்களத்தில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.