பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் கரு ஜெயசூரிய இது தொடர்பாக இன்று அறிவிக்கையில் பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
கடந்த அரசாங்க கரலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான கடனை செலுத்த வேண்டியிருப்பதாக தெரிவித்த அமைச்சர் வைத்தியசாலைகளில் மருந்து கொள்வனவு , உர கொள்வனவு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்னைய அரசாங்கமான தற்போதைய எதிர்க்கட்சியினர் பெற்றுக் கொண்ட கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. பொதுமக்களின் நாளாந்த நடவடிக்கையின் தேவைக்காகவே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கீடு செய்த பாராளுமனற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல முதலாவது பிரேரணைக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவிப்பதாகவும் 2 ஆவது பிரேரணையை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலமையை கருத்தில் கொண்டு பாராளுமன்றம் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)