 50,000 தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டத்தை பெற்றவர்களை தொழில் வாய்ப்பில் ஈடுபடுத்துவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்த அமைச்சரவையின் தீர்மானம் பின்வருமாறு,
50,000 தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டத்தை பெற்றவர்களை தொழில் வாய்ப்பில் ஈடுபடுத்துதல்
தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் பட்டத்திற்கு சமமான தகுதியான பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தகுதியை பூர்த்தி செய்துள்ள டிப்ளோமாதாரிகள் உள்ளிட்ட 50,000 பேரை தொழில் வாய்ப்பில் ஈடுபடுத்துவதற்காக அமைச்சரவையினால் தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் கண்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
* பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படும் பட்டதாரிகளுக்கும் டிப்ளோமாதாரிகளுக்கும் பயிற்சியளாருக்கான நியமன கடிதத்தை வழங்குதல் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் / மாவட்ட அரசாங்க அதிபர்களினால் மேற்கொள்ளுதல்.
* இந்த பயிற்சியாளர்கள் பயிற்சி கால வரையறுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள நிறுவனங்களுக்குள் இணைக்கப்பட்டு பயிற்சியை வழங்குதல்.
* ஒரு வருடம் திருப்தியான பயிற்சி காலத்தின் இறுதியில் இவர்கள் பணியாற்ற விருப்பத்தை தெரிவித்துள்ள கிராமிய பிரதேசத்தில் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அரச சேவைக்கு உட்பட்ட நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளுதல்.