பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பகுதிகளுக்கு முப்படையினரை அனுப்புவது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து முன்னாள் ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், Read more
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தள வரை பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணத்தை அறவிடுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றையதினமான 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது. http://www.ketheeswaram.com/ என்பது இதன் முகவரி ஆகும்.
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையிலுள்ள விடயங்களை இலங்கை பாதுகாத்து நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.
பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் புவனெக்க அலுவிஹார பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மின்மானிகளில் காணப்படும் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், சகல வசதிகளுடன் கொண்ட புதிய ஸ்மார்ட் மின்மானிகளை அறிமுகப்படுத்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னத்தில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயமாகியுள்ளது.