யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி டோட்மூன்ட் ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் திரு. விஜயராஜா கெளரீஸ்வரன் (தோழர் கௌரி) அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று ஜேர்மனில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
1986 பிற்பகுதியில் கழகம் தனது செயல்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியபோது பல கிழக்கு மாகாண தோழர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்த அவரது உதவிகள் என்றும் நினைவுகூரத்தக்கது. Read more
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் ஒருநாள் சேவை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இதற்காக விசேட திட்டங்கள் வகுக்கப்ட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.