 யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் இன்றைய தினம் பருத்தித்துறை மணற்காட்டு பகுதியில் தீயினை அணைப்பதற்காக விரைந்து சென்ற போது யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு வாகனத்தின் வலது பக்க முன் சில்லில் காற்று போனதன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி அருகில் வயலுக்குள் பாய்ந்து வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவத்தில் அரியரட்ணம் சகாயராஜா எனும் 37 வயதுடைய தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் தீயணைப்பு வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.