 கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட  தொற்றாளர்களில், 541 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனஇராணுவத்தளபதி சவேந்திர சில்வா  ஊடகமொன்றுக்கு இன்று (திங்கட்கிழமை) காலை கருத்து வெளியிடும்போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த பலர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதிக்குப் பின்னர் நேற்று வரையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 5127 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.