சுமார் 68,000 இலங்கையர்கள் நாட்டுக்கு வருவதற்காக காத்திருப்பதாக,இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மோசமான உலகளாவிய நிலையின் கீழ், தற்போது நிலவும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றான இலங்கையர்களை
நாட்டுக்கு மீள அழைத்து வரும் செயன்முறையானது, அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வழிகாட்டல்களின் பேரில் வெளிநாட்டு அமைச்சின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 பெப்ரவரி மாதத்தில் வுஹான் நகரத்திலிருந்து 33 மாணவர்களை நாட்டுக்கு மீள அழைத்து வந்ததிலிருந்து இன்றுவரை 60,470 இலங்கையர்கள், 137 நாடுகளில் இருந்து வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் மூலமாக அமைச்சு நாட்டுக்க மீள அழைத்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.