நாட்டில் கொவிட்டைக் தொற்றை கட்டுப்படுத்த ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெறுவது பெரும்பாலும் சாத்தியமாகும் என தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க பல நிறுவனங்களுக்கு இடையில் ஒகப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது உருவாக்கப்பட்டு வரும் கொவிட் – 19 தடுப்பூசி புதிய வைரஸைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

´புதிய வகை வைரஸ் தற்போதுள்ள வைரசை விடவும் புதிய வகை வைரஸ் 70 சதவீத வீரியத்துடன் பரவ கூடியது. ஆனால் நோய் அதிகரியும் உயிரிழப்பும் ஒரே முறையிலேயே அமையும். ஆதில் மாற்றம் இல்லை. இதுவரை தயாரிக்கப்பட்டடுள்ள கொவிட் தடுப்பூசிகளுக்கும் இந்த வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகம். நூட்டுக்குள்ளும் இவ்வாறான iவைரஸ் பரவக்கூடிய நிலையுள்ளதால், இங்கிலாந்தில் இருந்து வந்த விமானங்களை நிறுத்த வேண்டியேற்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னரும் தொற்றாளர்கள் நாட்டை வந்தடைந்தனர். தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் உள்ள ஒருவருக்கும் புதிய வகை வைரஸ் பரவியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.