இலங்கையில் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று(30) மேலும் 08 மரணங்கள் பதிவாகியுள்ளதையடுத்து,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 313 ஆக அதிகரித்துள்ளது.

கண்டி-மடுவல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணும், பாணந்துறை- வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணும், கொழும்பு-13 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு-10 ஐச் சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு-15 ஐச் சேர்ந்த 52 வயதுடைய ஆண் ஒருவரும், ஹோமாகம- பொக்குணுவிட்ட பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரும், ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு-15 ஐச் சேர்ந்த 93 வயதுடைய ஆண் ஒருவரும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 63, 293 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 56,277 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள அதேவேளை மேலும், 6,703 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.