கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் மே மாதம் 21ஆம் திகதி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை கண்காணிப்பதற்காக குற்ற விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று இன்று, சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளது.

இந்தக் குழுவினர் கடற்படையினரின் உதவியுடன் கப்பலுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.