தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரன் (பொன்னுத்துரை சிவகுமாரன்) அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். பொன்.சிவகுமாரன் அவர்கள் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார்.
அவர் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார்.
இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார்.
1950ம் ஆண்டு ஜூன்மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார்.
1974ம் ஆண்டு ஜூன் மாதம் 05ம்திகதி பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது பொன். சிவகுமாரன் அவர்கள் அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்தார்.