மாகாண நிர்வாகங்களுக்குட்பட்ட ஒன்பது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதென எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயல் என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more
நாடுதழுவிய ரீதியில் அதிகரித்துவரும் கொரோனா நோய் பரவல் காரணமாக முடக்கநிலையில் தொழிலுக்குச் செல்ல முடியாமலும் வருமானம் இன்றியும் இன்னல்படும் மக்களிற்கான உலர் உணவு பொதிகளை திருகோணமலை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் கெங்காதரன் (லண்டன்)அவர்களின் நிதிப் பங்களிப்பில் மன்னார் முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் சிவம், பிரதீபன், சமுர்த்தி உத்தியோத்தர் சமீன், சமுர்த்திக் குழு தேவராஜ், ஜான்சி ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர்.
அன்பார்ந்த புலம்பெயர் தேசத்து கழகத் தோழர்கள் மற்றும் உறவுகளுக்கு,
வவுனியா நகரசபைத் தலைவர் இராசலிங்கம் கௌதமன் பொலிசாரால் இன்று மதியம் (15) கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் ஆரம்பநிலை நீதிமன்றங்களை தாபிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள நீதியமைச்சு முன்வைத்து யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி. மேனகா மூக்காண்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் 09 வைத்தியசாலைகளையே இவ்வாறு சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில், பொலிஸார், நேற்று (14) ஈடுபட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ஆம் திகதியன்று பயணக்கட்டுப்பாட்டை நீக்குவதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் சனி (19) அல்லது ஞாயிறுக்கிழமை (20) தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.