உலகம் முழுவதும் விதவைகள் எண்ணிக்கையும் அவர்கள் மீதான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் 23ஆம் திகதியை சர்வதேச விதவைகள் தினமாக International Widows’ Day அறிவித்து, 2010ம் ஆண்டு இறுதியில் ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. Read more
23.06.1994இல் மரணித்த தோழர் புஷ்பன் (சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்- ஆயித்தியமலை) அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக, ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (23) பாராளுமன்றம் காலை 10 மணிக்கு கூடியது.
நாட்டில் நேற்று முன்தினம் (21) மேலும் 71 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக நேற்று(22) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று (23) இரவு 10 மணி முதல் 30 மணித்தியாலங்கள் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.