மட்டக்களப்பு மாவட்டம், ஆறுமுகத்தான் குடியிருப்பில் வசிக்கும் முள்ளந்தண்டு பாதிப்புக்குள்ளான மூ.இராசதுரை என்பவரின் குடும்பம் வாழ்வாதார வசதிகளின்றி வறுமையில் வாழ்ந்த நிலையில் அவர்கள் கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய புளொட் அமைப்பின் சுவிஸ் கிளைத் தோழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட 50,000 ரூபாய் நிதியில், அக் குடும்பத்தின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவியாக கோழிக்கூடு அமைத்துக்கொடுத்து, கோழிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டன. Read more
29.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் இராமநாதன் (பிச்சறால் இராசேந்திரன்- உவர்மலை), சேகர் (சித்திரவேல் செல்வராஜா- செட்டிக்குளம் ) ஆகியோரின் முப்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…..
பெற்றோல் விலையேற்றம், தமிழ் மக்களின் பிரச்சினை உள்ளிட்ட பலவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில், இன்று (29) காலை, கண்டன சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பமான இந்த சைக்கிள் பேரணி, மானிப்பாய் பிரதேச சபை முன்றல் வரை சென்று நிறைவடைந்தது.
நாட்டில் மேலும் ஆயிரத்து 320 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வெளிநாடுகளில் உள்ள 142 இலங்கையர்கள், இதுவரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.