யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடம் கொண்ட திரு. முருகுப்பிள்ளை நல்லதம்பி (நல்லதம்பி அண்ணர்) அவர்கள் நேற்று (04.02.2022) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more
வீடுகளுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தில், இராணுவ மற்றும் சுகாதாரத்துறை பிரதிநிதிகளின் குழுக்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் தலைவி திருமதி. அம்பிகா சற்குணநாதனின் இலங்கையின் மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளின் நிலைமை குறித்த சாட்சியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு கவலை வெளியிட்டுள்ளது.