Header image alt text

16.02.1986 இல் வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தில் மரணித்த தோழர் நியாஸ் (செ.அம்பிகைபாகன்- நொச்சிமோட்டை), மாயக்கண்ணன் ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

16.02.2007 இல் வவுனியா திருநாவற்குளத்தில் மரணித்த தோழர் கோன் (செல்லர் இராசதுரை- வவுனிக்குளம்) அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,217 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 631,816 ஆக அதிகரித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. Read more

எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு ​அழைப்பு விடுத்துள்ளது.  தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில், அரசியற் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக இக்கலந்துரையாடல் நடைபெற உள்ளது. Read more

“ஒரே நாடு – ஒரே சட்டம்” என்ற எண்ணக்கருவை அடைவதற்காக, ஜனாதிபதிச் செயலணியினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள யோசனைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனத்திற்கொண்டு, ஜனாதிபதியின் நோக்கத்தை அடைவதற்கு தங்களாலான ஒத்துழைப்புகளை வழங்குவதாக, அமைச்சர்கள் தெரிவித்தனர்.

Read more

ஒக்சிஜன் தேவைப்படும் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சைப் பெறும் கொரோனா தொற்றாளர்களின் எணிக்கை குறிப்பிட்டளவு அதிகரித்துள்ளது என கொவிட் தொடர்பாடல் சுகாதார அமைச்சின் தொழிற்நுட்ப சேவை பணிப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். Read more