Header image alt text

மூன்று கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் அண்மையில் வெளியிட்டுள்ளமை சட்டத்திற்கு உட்பட்டது என ஜனாதிபதி சட்டதரணி யூ ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார். Read more

கொவிட் தொற்றுக்கான மேலும் 23 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,595 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

செலுத்த வேண்டிய தண்டப்பணத்தை விரைவில் செலுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 08 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல் காலத்தின் போது தோல்வியடைந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களில் இருந்து குறித்த 08 பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை வௌியேறவில்லை என பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read more

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இன்று (06) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார். பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். Read more