சுகாதார நிபுணர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்று சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
சுகாதார நிபுணர்கள் சம்மேளனத்தின் விசேட செயற்குழு கூட்டம் நாளை காலை கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர மற்றும் அழைப்பு கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்தால் சாதகமான முடிவை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.