நாட்டில் மேலும் 30 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,874 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 304 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். Read more
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை, கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா, மரக்காரம்பளை வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.