துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார். Read more
இந்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியும் என தெரிவிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்.ஜி.புஞ்சிஹேவா, பெரும்பாலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இந்த வருடத்தில் நடத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வேயின் வதிவிடப் பிரதிநிதி Trine Jøranli Eskedal மன்னாருக்கு இன்று (17) விஜயம் செய்துள்ளார். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டிமெல்லை சந்தித்த இலங்கைக்கான நோர்வே பிரதிநிதி, அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.