ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்க ஆரம்பித்துள்ளன. Read more
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வின் போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.
ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் 40 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையைத் தந்துள்ளது எனச் சுட்டிக்காட்டி வேலணை பிரதேச சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, உக்ரேன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், உக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் “அமைதியாக இருங்கள். உக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் விலாதிமிர் புடின் கூறியுள்ளார். இதேவேளை, உக்ரைன் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.