உக்ரேன் மீதான படையெடுப்புக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகள், தனது நாட்டுக்கு எதிராக நட்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தனது பாதுகாப்பு பிரதானிகளுக்கு நாட்டின் தடுப்புப் படைகளை அதிக எச்சரிக்கையுடன் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போர் ஆரம்பித்துள்ள நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வௌியேற போலந்து எல்லையில் காத்திருப்பதாக துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான இலங்கை தூதுவர் எம்.ஆர். ஹசன் குறிப்பிட்டார். 