எரிபொருள் விலையேற்றம் காரணமாக பஸ் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டியுள்ளதாக பஸ் சங்கங்கள் கூறியுள்ளன. ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 30 ரூபாயாகவும், பஸ் கட்டணம் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் இந்த விடயத்தில்  உடனடியாக தலையிட்டு, தனியார் பஸ்களுக்கு டீசல் மானியம் வழங்கினால் பஸ் கட்டணத்தை மாற்றியமைக்காமல் இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும 450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலை, 30 ரூபாவினாலும் பணிஸ் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள்களின் விலை அதிகரிப்பை அடுத்து, சாப்பாட்டு ​​பொதியின் விலை 20 ரூபாவினாலும், கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.