அரசுக்கு ஒரு இலட்சம் இல்லை; பத்து மடங்கு பணத்தை நாங்கள் தருகின்றோம். நாம் கையளித்த எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் என முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி மற்றும் செயலாளர் பி.றஞ்சனா ஆகியோர், இன்று (16) ஊடக சந்திப்பை நடத்தினர். Read more
இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று பகல் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.bபோதிளயவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே இதற்கான காரணம் என குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிவாயுவை விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.