பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிலையில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
		    
வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  பிரதான சந்தேகநபர் உட்பட மேலும் இருவர் கைதாகி உள்ளனர். இன்று காலை கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் தந்தை மற்றும் சகோதரரே இவ்வாறு கைதாகி உள்ளனர். 
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென  இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.