மட்டக்களப்பை பிறப்பிடமாகவும், திருகோணமலை லிங்கநகரை வாழ்விடமாகவும் கொண்டவரும் கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அசோக் அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி சிங்கராஜா அம்புறோஷியா அவர்கள் இன்று பிற்பகல் காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
		    
மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். 
சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்.ஃஎப்) செல்வதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான உப செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார். 
நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில்களுக்கான பயணக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (23) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.