கழகத்தின் இராணுவப் பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட தோழர் காத்தான் (கிருஷ்ணசாமி கிருஷ்ணகுமார்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.  கழகத்தின் இராணுவப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த தோழர் சுந்தரத்தின் மறைவுக்குப் பின்னர் கழக இராணுவப் பொறுப்பாளராக பொறுப்பேற்று செயற்பட்டார். Read more
		    
இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்றுபகல் 1 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் மெய்நிகர் வழியாக திறந்து வைக்கப்பட்டது. 
குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். 
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 1 பில்லியன் டொலர்களை இந்தியாவிடம் கோரியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை இரண்டு தரப்பினரும் இன்று (28) உறுதிப்படுத்தியுள்ளதாகவும்  அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.