வவுனியா பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்தியர் செல்வரட்ணம் லவன் (தோழர் லவன்) அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (05.04.2022) செவ்வாய்க்கிழமை மரணித்தார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more
பலதரப்பு ஈடுபாடு மற்றும் கடன் நிலைத்தன்மை தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக பிரபல பொருளாதார மற்றும் நிதி நிபுணர்கள் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை (08) இரண்டு மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (06) முதல், தவணை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ள கல்வியமைச்சு, அடுத்த தவணை எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.
மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் சட்டவைத்திய அதிகாரிக்கும் பேராசிரியர் ராஜ் சோமதேவவிற்கும் அழைப்பாணை அனுப்ப நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இன்றைய வழக்கு விசாரணைக்கு இவர்கள் இருவரும் சமூகமளிக்காமையால், அவர்களுக்கு அழைப்பாணையை பிறப்பிக்க மன்னார் நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளால்தான் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருள்களுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வைத்திய சேவைகளை முழுமையாக முன்னெடுக்க முடிவில்லை எனவும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் முன்பாக இன்று (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில், ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா சபை,
அமரர் தோழர் மு.கனகராஜா அவர்களின் துணைவியாருக்கு வைத்திய செலவிற்காக கழகத்தினுடைய ஜெர்மன் கிளையினரால் அனுப்பிவைக்கப்பட்ட 20,000/= ரூபா நிதியை கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தோழர் சூட்டி, மத்திய குழு உறுப்பினர் தோழர் ராகவன் ஆகியோர் இன்று வழங்கிவைத்தனர்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், ஆர்ப்பாட்டக்காரர்களால முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு- காலி வீதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.